உலகம்

கொரோனாவுக்காக பிரித்தானியா கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமென பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரசுக்கான மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிக்காகவும், பரிசோதனை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்காகவும் பிரித்தானியா கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் காணொளி மூலமான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

முகநூல் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை

புதிய மருத்துவமனை 10 நாட்களுக்குள் – சீனா அரசு

குவைட் சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு