உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 9 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(10) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,955 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது 180 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 3147 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஞ்சனை கைது செய்யுமாறு CID இற்கு உத்தரவு

தடுப்பூசி செலுத்தாதோருக்கு பொது இடங்களுக்குள் நுழைய தடை

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்