உலகம்

கொந்தளிக்கும் மியன்மார்

(UTV |  மியன்மார்) – மியன்மாரில் மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக இராணுவம் அறிவித்துள்ளது.

மியன்மாரில் ஆங் சான் சூகி தலைமையிலான மக்களால் அமைந்த ஜனநாயக ஆட்சியை தேர்தல் ஊழல் என குற்றம் சாட்டி கலைத்த இராணுவம் மியன்மாரில் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர் 100க்கும் அதிகமானவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

மியன்மார் இராணுவத்தின் இந்த சர்வாதிகார போக்கை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில், தப்பித்து தலைமறைவான மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான புதிய அமைப்பாக சி.ஆர்.பி.எச்-ஐ தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக மியன்மார் இராணுவம் அறிவித்துள்ளது. அந்த அமைப்பிற்கு உதவும் மக்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

Related posts

ஈரான் செல்லும் அலி சப்ரி!

அமெரிக்காவில் இரண்டாவது நபர் பலி

கனடாவின் முக்கிய நகரை விட்டு பலர் வெளியேற- காரணம் என்ன?