உள்நாடு

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி தற்கொலை – தாயாரிடம் சாட்சிப் பதிவு

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் சாட்சி விசாரணைகள் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

கொட்டாஞ்சேனை பொலிஸாரின் நடவடிக்கையின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதன்போது, முதலாவதாக சிறுமி தற்கொலை செய்துகொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தலைவரிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இறந்த சிறுமியின் தாயாரின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

பின்னர், மேலும் பலரின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையை 22ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் சிறுமியின் தாயாரிடமிருந்து மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

Related posts

இலங்கை துறைமுக நகர சட்டம் தொடர்ந்தும் சர்ச்சையில் [VIDEO]

பகிடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

இலங்கை முஸ்லிம்களின் குறைகள் குறித்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் அக்கறைக்கு ரிஷாத் நன்றி