உள்நாடு

கைவிடப்பட்ட கார் ஒன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

ராகமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலவத்தை பிரதேசத்தில் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து T56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அடங்கிய இரண்டு மெகசின்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (23) இரவு, ராகமை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தத் துப்பாக்கியும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை அங்கு நிறுத்தி விட்டு சென்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த துப்பாக்கி மற்றும் காரை அவ்விடத்தில் கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ராகமை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

சனியன்று புலமைப்பரிசில் பரீட்சைக்கு சகல ஏற்பாடுகளும் தயார்

முல்லைத்தீவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

எரிபொருள் கிடைக்காவிடின் மாலை 4 மணிக்கு பின்னர் மின் துண்டிப்பு