தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, தனது சட்டத்தரணிகள் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், பொலிஸ் மா அதிபர், கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த தினம், கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தன்னை சட்டவிரோதமாகக் கைது செய்யத் தயாராகி வருவதாக வன்னிநாயக்க தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.