அரசியல்உள்நாடு

கைது செய்யப்பட்ட முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (10) கைது செய்யப்பட்டார்.

மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் திட்டங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர் பாரிசவாத நோயால் பாதிக்கப்படலாம்

editor

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

நாட்டில் எரிபொருள் நுகர்வு சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவிப்பு

editor