உள்நாடு

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம்

(UTV | கொழும்பு) –  ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோ கிராம் ஹெரோயின் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு அவசரமாக கூடியது!

editor

பண மோசடி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் எச்சரிக்கை!

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு