தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
4 கோடியே 60 இலட்சம் ரூபா பணத்தை எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளிப்படுத்தத் தவறியமை தொடர்பில், அவரை இன்று காலை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு கைது செய்தது.
குறித்த ஆணைக்குழுவினால் அவரிடம் ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
