வகைப்படுத்தப்படாத

கைக்குண்டு தாக்குதலில் நபரொருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – மஹியங்கனை – தொடம்கொல்ல பிரதேசத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் அங்கிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தால் உயிரிழந்துள்ளவர் 64 வயதான நபரொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்ட நபரை தேடி காவற்துறையால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

Eight trains cancelled due to maintenance work

கலவானையில் நான்கு மலைத் தொடர்களில் மண்சரிவு அபாயம்

குப்பைகளை அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதியால் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வௌியீடு