வகைப்படுத்தப்படாத

கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 7 பேர் பலி

(UTV|AMERICA)-மெக்சிகோவின் குவிண்டினா ரோ மாகாணத்தில் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பிளயா டெல் கார்மன். இங்கு உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானவர்கள் குழுமி இருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

 

 

 

 

 

Related posts

ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் இரத்து

இன்னும் 3 வருடத்திற்குள் புதிய ஜனாதிபதி..?

இலங்கையின் சில இடங்கள் உலக பாரம்பரிய அந்தஸ்த்தை இழக்கும்