வகைப்படுத்தப்படாத

கேரளாவில் கடும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTVNEWS|COLOMBO) – கேரளாவில் மழை, வெள்ளம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கேரளாவில் கடும் மழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும் இன்றும் கடும்மழை பெய்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மழை காரணமாக 1057 வீடுகள் முழுவதுமாக இடிந்துவிழுந்துள்ளதுடன், 11 ஆயிரத்து 159 வீடுகள் பகுதியாக சேதம் அடைந்துள்ளது.

மாநிலம் முழுவதும் 1206 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளதுடன், இந்த முகாம்களில் 2 லட்சத்து 21 ஆயிரம் பேர் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Halle Bailey is Ariel in Disney’s “Little Mermaid”

இனவெறியைத் தூண்டும் காணொளிகளுக்கு யூடியூப் நிறுவனம் தடை

හෙට (16) සිට වැසි සහිත කාලගුණයේ තරමක වැඩිවීමක්