உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மாரவில, முதுகடுவ கடற்கரையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலை நேற்று (03) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாரவில பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தர்ம வழியில் செல்வதால் இறைவன் உதவி கிடைக்கும் – தலைவர் ரிஷாட்

editor

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

editor

அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் – CID