வகைப்படுத்தப்படாத

கூட்டு எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் அதிகாரம் எனக்கில்லை – சபாநாயகர்

(UDHAYAM, COLOMBO) – கூட்டு எதிர்கட்சியின் தலைவரை நியமிக்கும் அதிகாரம் தமக்கு கிடையாது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற தமக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமக்கு பதிலாக டலஸ் அழகப்பெருமவை கூட்டு எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கடித மூலம் கேட்டிருந்தார்.

இது பற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் கலந்துரையாடி தீர்மானத்தை எடுக்குமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் இது தொடர்பாக உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர் மைத்திரிபால சிறிசேன , டலஸ் அலகப்பெரும மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் என்று உடன்பட்டால் மாத்திரமே டலஸ் அழகப்பெருமவுக்கு இவ்வாறானதொரு அங்கீகாரத்தை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

Related posts

Three-month detention order against Dr. Shafi withdrawn

பிரேசிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் மரணம்