வகைப்படுத்தப்படாத

கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை

கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை என அதன் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார். சீனாவில் புதிய தேடுபொறியை  தொடங்க கூகுள் திட்டமிட்டுள்ளது என்றும் அமெரிக்காவில் அரசியல் கட்சிகளிடம் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என்றும் கூகுள் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை குழு முன்பாக சுந்தர்பிச்சை நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது அரசியல் பாரபட்சத்துடன் கூகுள் செயல்பட்டதே இல்லை என்றும் அனைத்து விதமான கருத்துக்களையும் பதிவு செய்யும் தளமாகவே கூகுள் இயங்கி வருகிறது என்றும் சுந்தர் பிச்சை விளக்கம் அளித்தார். அப்போது ஆங்கிலத்தில் முட்டாள் என தட்டச்சத்து செய்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப்-பின் பெயர் வருவதற்கு என்ன காரணம் என ஒரு எம்பி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை,வேண்டும் என்று அப்படி ஒரு தவிரை கூகுள் நிறுவனம் செய்யவில்லை என்றும் தற்போதைய சூழலில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளையுடன் ஒப்பிட்டு அதன் அதிகப்படியான பயன்பாடு மக்களின் பதிவுகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டே தேடுபொறியில் வார்த்தைகள் சேர்ப்பதாக குறிப்பிட்டார்.

அதே போல் சீனாவில் கூகுள் நிறுவனம் தேடு பொறியை தொடங்கும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, உடனடியாக சீன தேடு பொறியை தொடங்கும் திட்டம் ஏதும் இல்லை என பதில் அளித்தார். ரோஹிங்கிய இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை விவகாரத்தில் சமூக வளைத்தளங்களின் பங்கு முக்கியமானதாக இருப்பதாக ஐநாவின் மனித உரிமை அமைப்பு எழுப்பிய குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறீர்களா என அமெரிக்கா வாழ் தமிழரும் , முதல் இந்திய அமெரிக்க பெண் எம்பியுமான பிரமிளா ஜெயப்பால் கேள்வி கேட்டார். அதற்கு சுந்தர் பிச்சை வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்கள் பேச்சுகளை கூகுள் தணிக்கை செய்தே பதிவிடுகிறது என்று தெரிவித்தார்.

 

 

 

 

 

Related posts

கம்பஹா-வத்தளை-மாபோல நகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

Sri Lanka all set for Expo 2020 Dubai

பரிந்துரைகளை அமுல்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்-ஐக்கிய தேசிய கட்சி