உள்நாடு

குழந்தைகள் மத்தியில் உயிராபத்துமிக்க ‘மிஸ்ஸி’

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிறுவர்களைப் பாதிக்கும் மற்றுமொரு நோய் தொடர்பில் கொழும்பு- சீமாட்டி வைத்தியசாலையின் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய, ‘மிஸ்ஸி’ (Multisystem Inflammatory Syndrome (MIS)) எனப்படும் குறித்த நோய் சிறுவர்களுக்கு ஏற்படுமானால், அது மரணத்தை கூட ஏற்படுத்தும் என, கொழும்பு- சீமாட்டி வைத்தியசாலையின் சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா இது குறித்து அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளமை காரணமாக, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மிஸ்ஸி நோய் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடும் என தெரிவித்துள்ள அவர், இந்நோய் மிகவும் பாரதூரமானது என தெரிவித்துள்ளார்.

எனவே 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுக்கொடுத்தால் இந்த நோயிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

கம்போடியா – தாய்லாந்து மோதல் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை – வெளிவிவகார அமைச்சு

editor

ஹஜ் கடமை பற்றி ஓர் அறிமுகம்!

பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவு