உள்நாடு

குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய விசேட குழுக்கள்

(UTV|குருநாகல் ) – குருநாகல் புவனேகபாகு மன்னர் கட்டடம் தகர்க்கப்பட்டமை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்வதற்கு 4 விசேடகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் நகரசபை தலைவர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு சமீபத்தில் சட்டமா அதிபரால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறுவுறுத்தப்பட்டிருந்தது.

குருநாகல் புவனேக்க ஹோட்டல் நடத்திச் செல்லப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டமா அதிபரினால் பொலிஸ் மா அதிபருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 388 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது

இது கொரோனாவின் மிகப்பெரிய இரண்டாம் அலை