குருநாகல் குளியாபிடிய/எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரி தனது 75வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று (03) சிறப்பாக கொண்டாடியது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பாடசாலை அதிபர் எம்.ஆர்.எம்.ரிப்கான் அவர்களின் தலைமையில் ஒரு மாபெரும் நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டது.
நடைபவணியில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்–மாணவியர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர்வாசிகள் என பலரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
பாடசாலையின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பலகைகள், கலாசார நிகழ்வுகள், இசைக்குழுக்கள் மற்றும் மாணவர்களின் உற்சாகக் குரல்கள் நடைபவணியை மேலும் சிறப்பித்தன.
இந்த நிகழ்வின் மூலம் பாடசாலையின் கல்வி, பண்பாடு மற்றும் சமூக பங்களிப்பு குறித்து நினைவூட்டப்பட்டு, அடுத்த தலைமுறைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கப்பட்டது.
-முஹம்மது ஜிப்ரான்