உள்நாடுபிராந்தியம்

குருநாகலில் தீ விபத்து – ஒருவர் பலி

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்து குறித்து குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம்

டயானா கமகேவின் பதவியை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் தடைகள்