அரசியல்உள்நாடு

குதிரை மூலம் ரணிலுக்காக பிரச்சாரம் செய்யும் அதாவுல்லாஹ் எம்.பி

கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளைக் குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டி இடும் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரித்து குறித்த குதிரைகள் தினமும் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.

மேலும் ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டங்கள் இடம்பெறுகின்ற இடங்களை மையப்படுத்தி குறித்த இரு குதிரைகளும் காட்சிப்படுத்தப்பட்டு வருவதுடன் வித்தியாசமான முறையில் மக்களிடம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பிரசாரம் செய்து வருகின்றன.

இன்று சம்மாந்துறை பகுதியில் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்திற்கு மன்னர் கூட்ட அழைப்பிற்காக குதிரைகளை ஏற்பாட்டாளர்கள் காட்சி பொருளாக பயன்படுத்தி மக்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னம் குதிரை என்பதுடன் இம்முறை இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினை அவர் ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

Related posts

PANDORA PAPERS : இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் ஜனாதிபதி ரணில்

editor

இலங்கை யாத்திரர்கள் இன்று மீண்டும் இலங்கைக்கு