உள்நாடுபிராந்தியம்

குடும்பமொன்று பயணித்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் கரோலினா தோட்டம் பகுதியில் இன்று (11) காலை குடும்பமொன்று பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெல்லம்பிட்டியவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

காரை மகள் செலுத்திச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

எதிர்திசையில் பயணித்த பேருந்துக்கு வழிவிட முயன்றபோது, ​​சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காரில் இருந்த மூன்று பேர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் தெய்வாதீனமாக இரண்டு பிள்ளைகளுக்கும் எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பதுளை மாவட்டத்தில் மண்சரிவுகள் – பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

editor

CID யில் ஆஜரானார் மிஹிந்தலை தேரர்

editor

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை

editor