கேளிக்கை

குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா

(UTV|INDIA)-தென்னிந்திய சினிமாவின் புதுமண ஜோடியான சமந்தா – நாக சைதன்யாவுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. இதை கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன்பு இருவரும் வெளிநாட்டுக்கு சென்றனர். அங்கே சமந்தா கவர்ச்சியான ஆடைகளுடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையானது.

ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளான நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேள்விகள் எழுந்தன. இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருமண நாளை மாமனார் நாகார்ஜுனாவின் குடும்பத்துடன் கொண்டாடி இருக்கிறார்.

குரோஷியாவிலுள்ள டர்போனிக் நகருக்கு தங்கள் முதல் திருமண நாளைக் கொண்டாடச் சென்றிருக்கும் சமந்தா, இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை ஷேர் செய்து “என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில், நான் ஒவ்வொரு நாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுகிறேன்.

என்னில் பாதிக்கு முதல் திருமண நாள் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நாக சைதன்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார். திருமண நாளினை குரோஷியாவில் கொண்டாட வேண்டும் என்ற முடிவினைத் தாண்டி, அந்தப் பயணத்துக்கு தனியே செல்லாமல் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரபல பின்னணிப் பாடகர் உதித் நாராயணனின் மகன்

தவறாக நடக்க முயன்ற கதாநாயகனை ஓங்கி அறைந்த ராதிகா

தாதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் மோகன்லால்