வகைப்படுத்தப்படாத

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்துக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள கம்மன்பில!

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை வழங்குமாறு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் வழங்காவிட்டால் வழக்குத் தொடர உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல்களை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்துக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்குவதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமை தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திடம் உதய கம்மன்பில இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related posts

US brings in new fast-track deportation rule

சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் குற்றச்சாட்டு

மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை