உள்நாடு

கீரி சம்பா அரிசிக்கு பதிலாக பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி 2025-10-15 முதல் 2025-11-15 வரை அந்த அரிசியை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெறுவதற்கான தேவையிலிருந்து பொன்னி சம்பா அரிசியை விலக்கு அளிக்க வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகிய அமைச்சர்கள் கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு நிலவும் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

வாக்குச்சீட்டை படம் எடுத்த அதிபர் கைது

editor

குணமானவரை மீண்டும் நோயாளியாக்க இடமளிக்க முடியாது – ஜனாதிபதி ரணில்

editor

குழந்தையை ரயில் கழிவறையில் விட்டுச்சென்ற தம்பதியினரிடமே குழந்தையை ஒப்படைக்கப்பட்டுள்ளது