வகைப்படுத்தப்படாத

கீதாவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய அதிரடி உத்தரவு!

(UDHAYAM, COLOMBO) – கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச்செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு உயர்நீதிமன்றத்தால் வௌியிடப்பட்ட இடைக்கால தடையுத்தரவு ,மனு விசாரணைகள் நிறைவடையும் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அது , கீதா குமாரசிங்க தாக்கல் செய்திருந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதாகும்.

இரட்டை குடியுரிமை கொண்டுள்ள கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த 3ம் திகதி தீர்ப்பொன்று வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்புக்கு எதிராக கீதா குமாரசிங்க தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் அந்த தீர்ப்பிற்கு இம் மாதம் 15ம் திகதி வரை இடைக்கால தடையுத்தரவொன்றை கடந்த 12ம் திகதி வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

Agarapathana tragedy: Body of missing girl found

நானாட்டான் பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்!