அரசியல்உள்நாடு

கிழக்கு ஆளுநரின் அம்பாறையில் நடைபெற்ற மக்கள் தினம்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர அவர்களால் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில்இ அம்பாறை மாவட்டச் செயலகத்தில் வியாழக்கிழமை (06) மக்கள் தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரமஇ கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை பொறுப்பான அதிகாரிகளிடம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட அதே வேளை ஆளுநர், மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரிடமும் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

-பாறுக் ஷிஹான்

Related posts

வலுக்கும் கொரோனா : 276 நோயாளிகள்

பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய இந்தியா கடனுதவி

இலங்கையின் முதல் மின்சார schooty அறிமுகம்