உள்நாடு

கிளிநொச்சி மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி

(UTV |  கிளிநொச்சி) – கிளிநொச்சி – பளைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பளை , இத்தாவில் பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாத்திலிருந்து பளை பிரதேசத்தை நோக்கி சென்ற மோட்டார் வாகனம் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனத்தில் நேருக்கு நேர் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த 38 வயதுடைய தந்தை, 14 மற்றும் 11 வயதுடைய அவருடைய பிள்ளைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அரசாங்கத்துக்கு பதிலளிக்க பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வர வேண்டும் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

பள்ளிவாசலில் சத்தியப் பிரமாணம் செய்த இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்!

editor

கொவிட் தடுப்பூசி பகிரப்படும் முறை