உள்நாடு

கிளப் வசந்த கொலை – 21 வயதான யுவதி கைது – 48 மணி நேரம் தடுப்பு காவலில்

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதி இன்று (21) கடுவலை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கைக்கு பதில் நீதவான் அனுமதித்துள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு உதவியதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 115 அமெரிக்க டொலர்களை எட்டும்

சஹ்ரானின் மனைவியிடம் இன்று முதல் வாக்குமூலம்

பிசீஆர் பரிசோதனைகளுக்கான பணத்தினை அறவிடும் சாத்தியம்