உள்நாடு

கிறிஸ்தவ ஆராதனைகள் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில்

(UTV|COLOMBO) – நத்தார் தினத்தை கொண்டாடுவதற்காக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராகியுள்ள நிலையில் இலங்கையிலும் கிறிஸ்தவ இரவு ஆராதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கட்டுவாப்பிட்டிய சென்.செபஸ்தியன் தேவாலயத்தில் இரவு ஆராதானைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்கள், மற்றும் காயமடைந்த நிலையில், தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நினைவுகூர்ந்து நத்தார் பண்டிகையை விமர்சையாக இன்றி அமைதியாக கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அத்துடன் நத்தார் பண்டிகையை மிகவும் அமைதியாக கொண்டாடுமாறும் அவர் கிறிஸ்தவ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பட்டாசு பொருட்களை உபயோகித்து ஒலியை மாசுபடுத்தாமலும், அதற்கான செலவுகளை குறைத்து ஏழை மக்களுக்கு உதவுமாறும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அயலவர்கள், எந்த இனம் அல்லது எந்த மதமாக இருந்தாலும், அவர்களுடன் இணைந்து சகோதரத்துடன் வாழ்வதற்கு இந்த பண்டிகை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் பிரதான மதமான பௌத்த மதத்தை சார்ந்த மக்களுடனும், அதேபோன்று இந்து மற்றும் இஸ்லாமிய மக்களுடனும் இணைந்து நத்தார் பண்டிகையை சகோதரத்துவத்துடன் கொண்டாடுமாறும் கிறிஸ்தவ மக்களிடம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

இலங்கை பிரதமர் – இந்திய பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம் அனுப்பிய மனோ கணேசன் எம்.பி

editor

சுகாதார அமைச்சிற்கு முன்னால் சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்தில்