அரசியல்உள்நாடு

கிரிந்த மீன்பிடி துறைமுகத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

கிரிந்த மீன்பிடி துறைமுகத்துக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (26) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

அங்குள்ள துறைசார் அதிகாரிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கிரிந்த துறைமுகத்தில் மணல் குவிவதால் கடற்றொழிலாளர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என அமைச்சரிடம் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில், மணலை அகற்றி, துறைமுகத்தை நவீன மயப்படுத்துவதற்குரிய உத்தரவை அமைச்சர் ஏற்கனவே பிறப்பித்திருந்தார்.

இதற்குரிய நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

மீன்பிடி துறைமுக மேம்பாடு, கடற்றொழிலாளர்களுக்குரிய தொழில்நுட்ப ஆலோசனை உட்பட அத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றம் மற்றும் திட்டங்கள் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

இலங்கையின் கடல்வளம் மற்றும் கடற்றொழிலாளர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகவும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

தண்டனைச் சட்டக்கோவை திருத்த சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor

கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை அவர் நாட்டிலேயே உள்ளார் எவரும் அழைக்கவில்லை – சாகர காரியவசம்

editor

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது