விளையாட்டு

சகலத்துறை ஆட்ட நாயகன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

(UTV|INDIA) – அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் இர்பான் பதான் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சகலத்துறை ஆட்ட நாயகனாக விளங்கிய இர்பான் பதான் இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக 29 டெஸ்ட் (100 விக்கெட்), 120 ஒருநாள் (173 விக்கெட்), 24 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாறு படைத்தவர்.

2007-ல் இந்திய அணி இருபதுக்கு – 20 உலகக்கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தவர் இர்பான் பதான். இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

கடந்த 2012-ல் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இர்பான் பதான் கடைசியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Related posts

Copa Del Rey : பார்சிலோனா கிண்ணத்தினை கைப்பற்றியது

அனர்த்தத்தினால் மெய்வல்லுனர் வீரர்கள் பலர் பாதிப்பு

ஏஞ்சலோ மேத்யூஸ் தாயகம் திரும்பினார்