கிசு கிசு

கின்னஸ் சாதனை படைத்த 16 வயது சிறுமி

(UTV|INDIA)-குஜராத்தை சேர்ந்த 16 வயது சிறுமி நிலான்ஷி படேல், உலகிலேயே நீளமான தலை முடியை கொண்டவர் என்கிற சாதனை படைத்துள்ளார். அவருடைய இந்த சாதனைக்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் அவரிடம் வழங்கியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“இவர் சிறு வயது முதலே தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதன் பலனாக தற்போது அவருக்கு 5.7 அடிக்கு தலை முடி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”என்னுடைய 6 வயதில் நான் ‘பாப் கட்’ செய்தேன். ஒருகட்டத்தில் எனக்கே அது பிடிக்காமல் போனது. பின்னர் என் பெற்றோரிடம் இனி நான் தலைமுடியை வெட்ட போவதில்லை என கூறினேன். தலை முடியை நீளமாக வளர்க்க விரும்பினேன். அதன் பரிசாக தற்போது உலக சாதனை சான்றிதழை ஏந்தி நிற்கின்றேன்” என கூறினார்.

மேலும் அவர், ”நீளமான தலை முடியை பராமரிப்பது கஷ்டம் என கூறுகிறார்கள். ஆனால் இதுவரை நான் அதை உணர்ந்ததில்லை. என் தாய் மற்றும் சகோதரர் எனது தலைமுடியினை பராமரிக்க பெரிதும் உதவினர். வாரம் ஒருமுறை எனது தலைமுடியினை அலசுவேன், சுமார் ஒரு மணி நேரம் உலர விடுவேன், பின்னர் கூந்தலை பின்னி முடிய குறைந்தது அரை மணி நேரம் தேவைப்படும்” என்று அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து வருவது?

10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் தொல்லை – இது குற்றமில்லையெ நீதிமன்றம் தீர்ப்பு

“டேவிட் பெக்காம்” கார் ஓட்டத் தடை!