கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஆர்.எம். அஸ்மியின் நேரடி வழிகாட்டலின் கீழ், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச மக்களுக்கு இன்று (05) மாலை குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
தற்போதைய வெள்ளத்தால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு மோசமடைந்துள்ள நிலையில், மக்கள் அவசரநிலைக்கு உள்ளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரண நடவடிக்கையாக கிண்ணியா பிரதேச சபை இந்த குடிநீர் விநியோக நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்த விநியோகப் பணிகளில் பிரதேச சபை அதிகாரிகள் இணைந்து செயற்பட்டனர்.
-கிண்ணியா நிருபர் ஏ. ஆர். எம். றிபாஸ்
