அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி இடையிலான புதிய படகு சேவை ஆரம்பம்

கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி இடையிலான புதிய படகு சேவை இன்று (27) உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் வசதிக்காக ரூ. 75 மில்லியன் செலவில் இத்தற்காலிகப் படகு சேவை இரண்டு ஆண்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஏற்பட்ட படகு விபத்தில் 8 பேர் உயிரிழந்ததை அடுத்து, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி இம்முறை சொகுசு இயந்திரப் படகு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய பாலம் அமைப்பதற்காக ரூ. 1200 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் நிர்மாணப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீம், கிண்ணியா பிரதேச அமைப்பாளர் எம்.ஈ.எம். ராபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

நீதிமன்றில் ஆஜரானார் விமல்!

செங்கடலுக்கு பாதுகாப்பு கப்பலை அனுப்பியதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு பேச்சுவார்த்தை