உள்நாடுபிராந்தியம்

காலியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் பலி

காலி – பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.

வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முயன்ற போது நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

Related posts

தோல்வியை வெற்றிக்கான படிக்கல்லாக பயன்படுத்தியிருக்கின்றேன் – மங்கள

சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் பரிசீலனை

அனைத்து பல்கலை மாணவர்கள் இன்று கொழும்புக்கு