உள்நாடு

காலியில் கடும் மழை – நீரில் மூழ்கியுள்ள வீதிகள்

காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக அந்நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, காலி – வக்வெல்ல வீதியூடான போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல்

தயவு செய்து இது பிரசுரிக்க வேண்டாம் – பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நீதி வேண்டி மகளிர் போராட்டம்