கேளிக்கை

கார்த்திக் – சமந்தா இணையுமா?

(UTV |  சென்னை) – தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வரும் கார்த்தி நடிப்பில் தற்போது சர்தார் திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விருமன் திரைப்படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் மற்றும் நடிகையான கார்த்தி, சமந்தா இதுவரை ஒன்றாக நடித்ததில்லை.

ஆனால் தற்போது இந்த கூட்டணி அமைந்துவிடும் போல தான் தெரிகிறது. ஆம், Bachelor படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அப்படத்தில் தான் நடிகை சமந்தா கார்த்திக்கு ஜோடியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

NETFLIX இனது அதிரடித் தீர்மானம்

விஜய்யின் சுவாரஷ்யமான தகவலை வெளியிட்ட சஞ்சீவ்

விக்ரமின் சாமி2 படம்