உள்நாடுபிராந்தியம்

காரில் பயணித்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

பனாமுரே – மித்தெனியா வீதியின் லெல்லவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு நபர்களும் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 190 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் 27 மற்றும் 36 வயதுடைய செவனகல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பனாமுரே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

குடும்பப் பெண்  சடலமாக மீட்பு – இரட்டைச் சகோதரிகள் கைது!

editor