உலகம்

காரில் குண்டு வெடிப்பு – ரஷ்ய ஜெனரல் பலி

கார் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ரஷ்ய லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) உயிரிழந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வரோவ் ஆயுதப்படைகளின் நடவடிக்கை பயிற்சிப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் உக்ரைன் புலனாய்வுப் பிரிவினரின் ஈடுபாடு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உக்ரைன் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

ரஷ்ய தலைநகரின் தெற்குப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா

editor

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா – முழு விபரம்

Shafnee Ahamed

பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் பலி