உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடி ஆரையம்பதியில் வெடிப்புச் சம்பவம் – இளைஞர் காயம்!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி திருநீற்றுக்கேணி கடற்கரைப் பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கடற்கரையில் இன்று (03) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் கடலில் மர்மப் பொருள் ஒன்று மிதப்பதைக் கண்டு அதை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது குறித்த மர்மப் பொருள் வெடித்ததில் 25 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள காத்தான்குடி பொலிஸார் குறித்த மர்மப்பொருள் பெரலைட் என்றும் அது வெடித்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

 சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்- வர்த்தக அமைச்சர்

தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் பிரதமர் ஹரினி தலைமையில் இடம்பெற்றது

editor

யாழ்ப்பாண மாவட்ட செயலரின் மகன் பயணித்த வாகனம் விபத்து – இருவர் காயம்

editor