சூடான செய்திகள் 1

காணாமல் போன சவுதி இளைஞனின் சடலம் கண்டெடுப்பு

(UTV|COLOMBO)-மகாவலி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த சவுதி அரேபிய இளைஞரின் சடலம் இன்று (21) கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வரதென்ன பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த சவுதி அரேபிய பிரஜைகள் 7 பேர் பயணித்த படகு கவிழ்ந்து நேற்று விபத்து ஏற்பட்டது.

7 பேரில் 6 நபர்கள் நேற்றைய தினம் காப்பற்றப்பட்டதுடன், ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

23ம் திகதி விசேட விடுமுறை

editor

இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் விசேட அறிவிப்பு

editor

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…