உள்நாடு

காணமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு!

(UTV | கொழும்பு) –  தலைமன்னார் துறை பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி நேற்றிரவு முதல் காணாமல் போயிருந்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பிரதேசமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதலின் அடிப்படையில் குறித்த சிறுமியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சிறுமி மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேநேரம், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் அபாயம்

கொழும்பில் 150 அபாயகரமான கட்டுமானங்கள்!

ரூமியின் பிணை மனு நிராகரிப்பு