உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலியதேவபுர பகுதியில் நேற்று (03) காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மலியதேவபுர, தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நிலத்தில் யானைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியின் மின்சாரத்தை துண்டிக்கச் சென்றபோது இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடல் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Related posts

இலங்கைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கியது பாகிஸ்தான் [VIDEO]

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை

மாத இறுதி ஞாயிறுகளில் கானியா CIDற்கு