கேளிக்கை

காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு

(UTV|INDIA) முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் காஜல் அகர்வால் முதன்முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த குயின் படத்தின் தமிழ் ரீமேக் இது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. அதில் ஒரு காட்சியில் காஜலுக்கு சக தோழி பாலியல் தொல்லை தரும் ஆபாச காட்சி இடம்பெற்று இருந்தது. இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த காட்சிபற்றி விளக்கம் எதுவும் அளிக்காமல் தனது வேலையை தொடர்ந்து கவனித்து வருகிறார் காஜல். இதற்கிடையில் தெலுங்கில் சீதா என்கிற படத்தில் நடித்து வருகிறார் காஜல். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அதைக்கண்டதும் ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியில் உறைந்தனர். பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்த ஆபாச காட்சியில் கொடுத்த அதே முகபாவனையை இந்த பர்ஸ்ட் லுக் படத்திலும் காஜல் தந்திருப்பதே அதிர்ச்சிக்கு காரணம்.
அவருடன் பட ஹீரோவும் ஜாலியான ஒரு முகபாவனை தந்திருப்பது அதிர்ச்சியை அதிகமாக்கி இருக்கிறது. இதுபோன்ற காட்சிகளில் நடித்திருப்பதற்கு காஜலை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Related posts

மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்ற மாணவி

ஆர்யாவுக்கு உதவ களத்தில் இறங்கிய சாந்தனு, கீர்த்தி

இயக்குனராக நயன்தாரா?