உள்நாடு

காசா எல்லைகளின் மீதான குண்டுத் தாக்குதல்களை கண்டிக்கிறோம் – . ரணில்விக்ரமசிங்க

(UTV | கொழும்பு) –

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 தூதுவர்களுடன் நேற்று  ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நிலையானதும் செயலூக்கமானதுமான பாலஸ்தீன அரசாங்கத்தை நிறுவி, (West Bank)பகுதிகளில் தஞ்சம் புகுந்திருப்பவர்களை நிரந்தரமாக குடியமர்த்த அவசியமான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதேபோல் ஒரு நாட்டை நிறுவி இரு நாடுகளுக்கு தீர்வு வழங்க முடியாதெனவும், ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் காசா எல்லைகளில் மீதான தொடர்ச்சியாக குண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்த கூடாதெனவும் ஜனாதிபதி உறுதியாக வலியுறுத்தினார். அதற்காக அமைதியான முறைமைகளை கையாள வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் காசா எல்லை பகுதிகளுக்கு இலங்கையின் உதவிகளை வழங்கவிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி,அப்பகுதிக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாலஸ்தீன் மக்களின் தற்கால துயர் நிலைகள் தொடர்பில் இலங்கையின் இடைவிடாத அர்பணிப்பை வலியுறுத்தும் வகையில் விரைவான போர் நிறுத்தமொன்று வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

இதன்போது பாலஸ்தீன் மற்றும் காசா எல்லைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கும் ஒத்துழைப்புக்கு மத்தியகிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட தூதுவர்கள் நன்றி தெரிவித்தனர். காசா எல்லையின் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து ஐக்கிய நாடுகளின் பரிந்துரைக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பையும் உறுதிப்பாட்டையும் தூதுவர்கள் பாராட்டினர்.

அதேபோல் செங்கடலின் பாதுகாப்பு முயற்சிகள் தொடர்பில் வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் கடல்வழி போக்குவரத்தில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையிலேயே இலங்கை மேற்படி முயற்சிகளுக்கு பங்களிப்புச் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது மேற்குலக நாடுகளுடன் காணப்படும் தொடர்புகளுக்கு மேலதிகமாக ஆசியா, மேற்கு ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட வலயங்களுடனான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள இலங்கை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையின் விரிவான வெளியுறவுக் கொள்கை தொடர்பிலும் வலியுறுத்தினார். இந்த மூலோபாய பிரவேசம் இராஜதந்திர தொடர்புகள், வலயத்தின் நிலைத்தன்மை பாதுகாப்புக்கான இலங்கையின் ஒத்துழைப்பை வெளிகாட்டுவதாக அமைந்துள்ளது.

இதன்போது இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் தலைமையில், எகிப்து, கடார்,ஐக்கிய அரபு இராச்சியம், லிபியா, ஈரான், குவைத், சவூதி அரேபியா, ஓமான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை சார்பில் ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன,ஜனாதிபதியின் வெளிநாட்டு அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொலம்பகே மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

   

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

BREAKING NEWS – சாமர சம்பத் எம்.பிக்கு பிணை

editor

கட்சி தீர்மானித்தால் ரணிலை ஆதரிக்கவும் தயார் – மஹிந்த ராஜபக்ஷ

BREAKING NEWS – இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

editor