அரசியல்உள்நாடு

காங்கேயனோடை, மட்டக்களப்பு வைத்தியசாலை பஸ் சேவை மீள ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்லாஹ் எம்.பி. கோரிக்கை

கடந்த சில மாதங்களுக்கு முன் மக்களின் அத்தியாவசிய கோரிக்கையின் பேரில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ள காங்கேயனோடை – மட்டக்களப்பு வைத்தியசாலை இடையிலான இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச.) பஸ் சேவை தொடர்பில், நேற்று முன்தினம் (30) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வினவினார்.

மாவட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளையும், பயணச் சிரமங்களையும் கருத்தில் கொண்டு, இந்தப் பஸ் சேவையை இடைநிறுத்தமின்றி தொடர்ந்து வழங்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மேலும், பொதுமக்களுக்கு மிகுந்த நன்மை தரக்கூடிய இந்தச் சேவை உடனடியாக மீளப் பரிசீலிக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

-ஊடகப்பிரிவு

Related posts

ரயிலில் தொங்கியப்படி செல்ஃபி – தவறி விழுந்த வெளிநாட்டுப் பெண் பலி

editor

கலாநிதி பட்டம் தொடர்பில் விளக்கம் அளிக்க வேண்டு இல்லை என்றால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

editor

உடன் அமுலாகும் வகையில் முடங்கிய பிரதேசங்கள்