உள்நாடு

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிக மழையின் காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இரத்தினபுரி களுகங்கையின் நீர்மட்டம் நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ள நிலைமைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், களு கங்கை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் இது தொடர்பாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இம் மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் 43 வாக்குகளால் நிறைவேற்றம்

“இலங்கையில் ஊடக சீர்திருத்தங்கள் தேவை” நாமல் ராஜபக்ச

தற்போதைய ஜனாதிபதியின் அரசின் கீழ் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை