உள்நாடு

களனி பல்கலைகழக 9 மாணவர்களுக்கு பிணை

(UTV|கொழும்பு) – களனி பல்கலைகழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைகழக 9 மாணவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மஹர நீதவான் நீதி மன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர்கள் ஒன்பது பேரும், தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

22, 23 மற்றும் 25 வயதுகளை உடைய 9 மாணவர்கள் கிரிபத்கொட பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி வரை மஹர நீதவான் நீதி மன்ற நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

Related posts

பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானம்

உப்பு தட்டுப்பாடு – பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

editor

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வெளியிட்ட முக்கிய தகவல்!

editor