உள்நாடு

களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைகிறது – நீர்ப்பாசனத் திணைக்களம்

களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களனி கங்கை வடிநிலத்தின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமைகளும் குறைந்து வருவதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.

இது தவிர, களுகங்கை, மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் நாகலம் வீதியில் உள்ள நீர் அளவீட்டின் நீர்மட்டம் இன்று அதிகாலை 02:00 மணிக்கு 8 அடியாக இருந்ததுடன், அதிகாலை 03:00 மணிக்கு 7.9 அடியாகக் குறைந்துள்ளது.

இருப்பினும், அங்கு பெரும் வெள்ள நிலைமை தொடர்ந்து நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஹங்வெல்ல நீர் அளவீட்டில் நீர்மட்டம் இன்று அதிகாலை 02:00 மணிக்கு 8 அடியாக இருந்ததுடன், அதிகாலை 03:00 மணிக்கு 7.93 அடியாகக் குறைந்துள்ளது.

இது மேலும் அபாய மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

களுகங்கையின் எல்கம நீர் அளவீட்டில் நீர்மட்டம் இன்று அதிகாலை 02:00 மணிக்கு 10.40 அடியாக இருந்ததுடன், அதிகாலை 03:00 மணிக்கு 10.30 அடியாகக் குறைந்துள்ளது. இது மேலும் அபாய மட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மல்வத்து ஓயாவின் தந்திரமலை நீர் அளவீட்டில் நீர்மட்டம் இன்று அதிகாலை 02:00 மணிக்கு 8.98 அடியாக இருந்ததுடன், அதிகாலை 03:00 மணிக்கு 8.95 அடியாகக் குறைந்துள்ளது.

அங்கும் பாரிய வௌ்ளம் அபாய நிலை நீடிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

திடீரென குறைந்தது கரட்டின் விலை

முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor

கொவிட் தொற்றுக்குள்ளான தாய்க்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்