உள்நாடு

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் புதனன்று இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்,முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்களை மீள திறப்பது குறித்து, 12ஆம் திகதி புதன்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென,கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலில் வைத்திய நிபுணர்கள், கல்வியலாளர்கள் உள்ளிட்டவர்களை அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related posts

எல்லை தாண்டும் மீன்பிடிப் படகுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

திசைகாட்டிக்கு இன்னும் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை இல்லாதொழிக்க முடியாது போயுள்ளது – சஜித் பிரேமதாச

editor

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்